'Aakkam' MALARCHI Urai
இயலாமையால் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் விட்டவர்கள், எவ்வளவு முயன்றும் படிப்பு வராதவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்து இடை நிற்றல் ஆனவர்கள், வறுமைக்கு பலியாகி பள்ளியை விட்டவர்கள் என ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது இதே சமூகத்திற்குள்ளேயே. இவர்களுக்குத்தான் உண்மையில் உதவி தேவை, சேவை தேவை. கல்வி தேவை.
இத்தகைய பிள்ளைகளுக்கு பெருநிறுவனங்களின் நிதியுதவியோடு தொழிற்கல்வி தந்து உருவாக்கிவிடும் பணியை செய்து கொண்டிருக்கிறது 'சுவாமி விவேகானந்தா சமுதாயக் கல்லூரி'.
வாழ்வைப் பற்றி அச்சங்களும் குழப்பங்களும் கொண்டிருக்கும் அத்தகைய மாணவர்களின் நெஞ்சில் நம்பிக்கை தீபம் ஏற்றும் வாய்ப்பைத் தந்தது வாழ்க்கை இன்று. 'ஆக்கம்' மாணவர்களுக்கான மலர்ச்சி உரை, புதுச்சேரி, சுவாமி விவேகானந்தா சமுதாயக் கல்லூரியில் இன்று காலை.
அவர்களது வாழ்வில் மாற்றம் வரட்டும்,
மலர்ச்சியும் வளர்ச்சியும் வரட்டும்!
Service is needed where really it is needed. Teenagers who are dull in academics, poor language, poor in economic, zero in belief system, nil in confidence, fear about future needs help, inspiration and growth.
Swami Vivekanada Community College is lifting life of economic backward, juvenile rehabilitation, school drop outs by providing them vocational training and making them ready for life.
'Aakkam' MALARCHI Urai for students of Swami Vivekananda Community College, Puducherry this morning.
வாழ்க! வளர்க!
-பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி,
28.11.2024
Comments