Blog'SALES Plus' - MALARCHI"s 1 Day Workshop on Selling

'SALES Plus' - MALARCHI"s 1 Day Workshop on Selling

26-02-2024 2 Comments

மலர்ச்சியின் மிக முக்கியமான அருமையான பயிலரங்குகளில் ஒன்று என 'சேல்ஸ் ப்ளஸ்'ஐ குறிப்பிடுவேன் நான்.

'முழுமலர்ச்சி', 'M2' எனப்படும் பிசினஸ் கோர்ஸ், பதின்ம வயதினருக்கான வகுப்புகள், பெற்றோர்களுக்கான வகுப்புகள்,  'உயிர் வளர்க்கும் மூச்சு' என மிக சிறப்பான பயிலரங்குகள் இருந்தாலும், 'சேல்ஸ் ப்ளஸ்' என்னும் மலர்ச்சியின் 1 முழுநாள் பயிலரங்கு நிறைய சங்கதிகளை அள்ளி, வரும் மனிதருக்குள் ஊற்றி அனுப்பி வைக்கும்.

சேல்ஸ் பற்றி எதுவும் தெரியாத தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், ஏற்கனவே சேல்ஸ்ஸில் இருப்பவர்கள், பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், சேல்ஸ் டீமை கொண்டுள்ள பிசினஸ் ஓனர், எதையாவது கற்க வேண்டும் என வருபவர் என எவருக்கும் புதிய பரிமாணங்களைத் தந்து, பார்வையில் தெளிவு தந்து உயர்த்தி விடும் 'சேல்ஸ் ப்ளஸ்'.

திருநெல்வேலியிலிருந்தும், கோயம்புத்தூரிலிருந்தும், நாமக்கல்லிலிருந்தும், ஈரோட்டிலிருந்தும் என வெளியூர்களிலிருந்து பயணித்து வந்து 'சேல்ஸ் ப்ளஸ்' பயிலரங்கில் கலந்து கொண்டனர் பலர் நேற்று. சென்ற ஆண்டு 'சேல்ஸ் ப்ளஸ்'க்கு வந்திருந்தும் கூட திரும்பவும் வந்து தங்களை புதுப்பித்துக் கொண்டு கற்க வந்தவர்களும் உண்டு. நேற்று (25.02.2024, ஞாயிறு) சென்னையில் நடந்த மலர்ச்சி 'சேல்ஸ் ப்ளஸ்' பெரும் தாக்கங்களையும் மாற்றங்களையும் உண்டாக்கியிருக்கிறது என்பதை நேற்று மாலையிலிருந்து  தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் குறுந்தகவல்களிலிருந்தும் அழைப்புகளிலிருந்தும் அறிய முடிகிறது. கூடுதல் மகிழ்ச்சி!

'இப்படி நான் சிந்தித்து பார்த்ததே இல்லை! முழு அடிப்படை அறிவியலை அழகாக தமிழில்... அருமை 'சேல்ஸ் ப்ளஸ்'!'

'வகுப்பு முடிந்து வெளியே வந்தும் மண்டை முழுக்கே வகுப்பே இருக்கிறது! ஃபுல் பாஸிட்டிவ்!' 

'பதஞ்சலி ப்ராடக்ட்ஸ் விக்கறோம். ரொம்ப நாளா செல்லிங்தான். ஆனா, இப்படி சிந்தித்ததே இல்லை!'

'போன வருஷமும் பண்ணேன் பரமன்! இந்த வருஷமும் சேல்ஸ் ப்ளஸ் வந்துட்டேன். பரமன் கிளாஸ்ல ஒவ்வொரு முறையும் புதுசாதான் வரும். வந்துச்சி! நெறைய கெடைச்சுது!'

'ஒரு ஃபுல் பிசினஸ் கிளாஸ் கெடைச்ச ஃபீலிங்!' 

'நிறைய மாத்த வேண்டியிருக்கு என் நிறுவனத்துலன்னு எனக்கு புரியுது. நன்றி!' 

இவை 'சேல்ஸ் ப்ளஸ்' பயிலரங்குக்கு வந்தவர்களின் சில பகிர்வுகள்.

வாடக்கையாளர், சந்தை, சேல்ஸ் பற்றி ஒரு துளி பார்வை மாறினாலும் போதும், அது நல்ல தொடக்கம். நேற்று மலர்ச்சி 'சேல்ஸ் ப்ளஸ்' பயிலரங்கில் ஒரு துளி அல்ல, பல லிட்டர்களை அள்ளிப் பருகிச் சென்றனர் வந்திருந்தோர்.  

அவர்கள் திறனும் செயல்பாடுகளும் மாறட்டும், அதன் வழியே நிறுவனத்தின் விற்பனையும் நிலையும் உயரட்டும்! 

பிரார்த்தனைகள்!

வாழ்க! வளர்க!

- பரமன் பச்சைமுத்து
மலர்ச்சி
26.02.2024

.....

'SALES Plus' - MALARCHI"s 1 Day Workshop on Selling  @Chennai 

#Selling #Sales #SalesExcellence #SalesTraining #SalesCoaching #Paraman #LifeCoach #Coach #ParamanLifeCoach #ParamanPachaimuthu #SalesSkills #SalesForce #SalesWorkshop #Malarchi #MalarchiCourse #MalarchiWorkshop #MalarchiSalesWorkshop #MalarchiSalesProgram #Leadership #Market #BusinessDevelopment #Business #Entreprenuers #BusinessExcellence #SalesPlus #VirpomVelvom

Comments

  • A

    Arokyadoss

    Very good session

  • R

    Rama Ramachandran

    I attended a sales workshop with Paraman. He explained the sales process clearly, breaking it down into simple steps. It made me see selling not just as exciting but as a crucial aspect and the right way of offering and improving any service. If the essence is followed and practised patiently, valuable services can be offered to many in the right way. I'm happy I got to join such an engaging workshop. Best regards. In gratitude.

Leave a Reply