Malarchi - 'Business Line'
திருநெல்வேலியிலிருந்து பிரபு ஹரிஹரன், புதுச்சேரியிலிருந்து ஆர்த்தி, காஞ்சிபுரத்திலிருந்து கீர்த்திநாதன், திருக்கோவிலூரிலிருந்து நாமதுரை ஆகியோர் இணைய வழியிலும், மற்ற தொழில்முனைவோர்கள் வகுப்பினுள் அமர்ந்து நேரிலும் என நிகழ்ந்தது பிப்ரவரி மாத 'பிஸினஸ் லைன்' மலர்ச்சி வகுப்பு (10.02.2024). (டெல்லி விமான பயணத்தில் வகுப்பை தவறவிட்டு தவித்தார் செந்தில் ஜிடிபி)
'வெள்ளத்தால் என் தொழிற்சாலையின் உற்பத்தி பாதித்து நின்றது. இதோ ஒரே மாதத்தில் மொத்தத்தையும் சரி செய்து மீண்டு இயக்கத்திற்கு கொண்டு வந்து விட்டேன்' ( மலரவர் லதா குமரவேல்)
'பரமன், ஒவ்வொரு மாதமும் 50% சேல்ஸ் இம்ப்ரூப் ஆகி வளர்றேன் பிசினஸில். மறு அவதாரம்!' (செந்தில்)
'இரண்டாவது உணவகத்தை திறக்கிறோம். வேலைகள் முழுமூச்சில் நடக்கின்றன. நன்றி மலர்ச்சி!' (பூர்ணிமா நீத்து, அனிஷ்)
'கூடுதல் ஊழியர்களை நிமயமித்து நிர்வாகத்தை வலிமையாக கட்டமைக்கிறோம். பொருளாதாரத்தில் சீரான வளர்ச்சி!' (காயத்ரி விஜய்)
'பரமனோடு இணந்தாலே பெருவெற்றிதான் எதிலும். எங்கள் நிறுவனங்களில் வெகுவான வளர்ச்சி! கொண்டாடுகிறோம்!' ( செந்தில் குமரன்)
'நீங்கள் தந்த உக்திகள் எங்கள் கடையை, பொருள்கள் விற்பனையை சூப்பராக உயர்த்தியுள்ளன. பொருளாதார மேம்பாட்டை கண் முன்னே காண்கிறோம்!' (ஓம் சேர்மா, ஜனார்த்தனன்)
'பரமன், சேல்ஸ் ட்ராக்கிங் சிறப்பா பண்ண முடியுது. விற்பனை கூடியுள்ளது. பிசினஸ் சிறப்பா!' ( கோபி)
'வெப்சைட், ப்ராடக்ட், சேல்ஸ், ஃப்ராஃபிட் என எல்லாவற்றிலும் அடுத்த நிலைக்கு உயர்ந்து விட்டோம் பரமன்!' (பிரபு, கோமதிசங்கர் தங்க மாளிகை, பாளையங்கோட்டை)
'ஹவுஸ் வைஃப் என்ற நிலையிலிருந்து ப்ரொஃபஷனல், 'டிவிஷன் ஹெட்டிங்' என்ற நிலைக்கு வந்து விட்டேன். ஒரு ப்ராஜெக்ட்டுக்கு அட்வான்ஸ் வாங்கியாச்சு. ரெண்டு நியூ ப்ராஜெக்ட் எடுத்தாச்சு!' (வள்ளி அழகப்பன்)
'என் அக்குபஞ்சர் ஸ்கூலில் ஸ்டூடன்ட்ஸ் அட்மிஷன்ஸ் 4 என்ற நிலையிலிருந்து இதோ 66க்கு வந்து விட்டேன். பொருளாதாரமும் சிறப்பாக உயர்ந்துள்ளது! மலர்ச்சிக்கு நன்றி!' (டாக்டர் ரத்னா)
'செலிப்ரேட்டிங் ஒன் இயர் ஆஃப் மை வோன் பிராண்ட் 'மிளிர்', 3 பிராஞ்சஸ் இன் புதுச்சேரி!' (ஆர்த்தி, புதுச்சேரி)
'அதே பிசினஸ், ஆனால் இப்போது இறுக்கம், அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாய் இயங்குகிறேன். ஃபினான்ஸியல் கமிட்மெண்ட்ஸ் குறைத்து விட்டேன்!' (சாந்தி, விகேஎம் கேட்டரிங்)
'இன்னைக்கு நான் அள்ளிட்டு போறதை வச்சி நெறைய முக்கிய முடிவுகள் எடுக்கப் போறேன்!' (ஆர்எம் ராஜேந்திரன்)
இவையெல்லாம் 'பிஸினஸ் லைன்' வகுப்பில் மாதாமாதம் தரப்படும் 'வணிக - நிர்வாக - மேலாண்மை' பாடங்களில் கற்றதை செயல்படுத்தி வந்த வளர்ச்சிப் பகிர்வுகளாக நேற்றைய வகுப்பில் (பிப்ரவரி) தொழில்முனைவோர்கள் பகிர்ந்தவற்றில் சில.
கண் முன்னே வளர்கிறார்கள், நம்பிக்கையோடு வளர்கிறார்கள், தங்கள் நிறுவனத்தையும் உயர்த்தி, தங்களையும் உயர்த்திக் கொள்கிறார்கள் இந்தத் தொழில் முனைவோர்கள் தொடர்ந்து இணைப்பில் இருந்து கற்பதன் மூலம்.
'பிசினஸ் கோச்' என்ற விதத்தில் பெருமிதம் கொள்கிறேன்.
வாழ்க! வளர்க!
- பரமன் பச்சைமுத்து
சென்னை
12.02.2024
....
New Ideas,
New Enhancements,
New Triggers,
New Goals,
New Clarity...
'Business Line' - MALARCHI Monthly Charge for Business Leaders
#ParamanLifeCoach #Paraman #ParamanPachaimuthu #BusinessCoach
#BusinessLine #google
#Motivational #MalarchiBusinessCoaching
#BusinessLeadership #BusinessCoaching #Success #Entreprenuers #MalarchiMaanavarga
Comments