'வளர்ச்சிப் பாதை' திருவண்ணாமலை
இரண்டு மாதங்களுக்குப்பிறகு 'வளர்ச்சிப் பாதை' திருவண்ணாமலையில், அர்பணா ஹோட்டலில் நேற்று மாலை.
மலர்ச்சி அலுவலகம் சென்னையிலிருந்து, டாக்டர் சக்திவேல் திருவண்ணாமலையிலிருந்து என இரண்டு அழைப்புகள் நினைவூட்டல்கள் கொடுக்கப்பட்டன எல்லா மலரவர்களுக்கும்.
கருத்து வேறுபாடுகள், திருத்தங்கள், உறவுகளுக்குள்ளே எழும் பிரச்சினைகளை கையாள்வது பற்றியும், இதில் சிறப்பதற்கான இரு திசை வழிகளும் விரிவாக விளக்கப்பட்டது வளர்ச்சிப்பாதையில்.
முந்தைய வளர்ச்சிப்பாதையில் கற்பிக்கப்பட்ட எளிய தேர்ந்தெடுக்கப்பட்ட உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து தோள் பட்டை, கழுத்து, தலை வலியிலிருந்து விடுதலை பெற்றதாய் பகிர்ந்தார்கள் கார்த்திகேயன், சுஜாதா, ஸ்ரீலதா, சிவக்குமார், ஷாலினி போன்றோர். இடுப்பு மற்றும் கால்களுக்கான பயிற்சி கற்றுத் தரப்பட்டது புதிதாய்.
'இதை செஞ்ச உடனேயே உடம்பு ஃப்ரஷ்ஷா ரீலீவ்வா நல்லா இருக்கு!' என்றார் போன முறை தவற விட்டு இம்முறை கற்றிக்கொண்ட கபிலன்.
மலரவர் சிவக்குமார் சிறப்பான கேள்வியை கேட்டு 'சாவிக்கொத்து' பதில் பெற்றுக் கொண்டார்.
மலரவர்கள் டாக்டர் சக்திவேல், டாக்டர் ரவி, மணிகண்டன், ராதா ஆகியோர் வருகையில் முதலிடத்தை பதிவு செய்தனர். பெங்களூரிலிருந்து ரமேஷ், வருண் ஆகியோரும், புதுச்சேரியிலிருந்து சந்திரசேகர், தாட்சாயிணி ஆகியோரும், செஞ்சியிலிருந்து பார்த்திபன் ஆகியோரும் வந்திருந்து பயன் பெற்றனர். கடலாடி தம்பதியினர், டாக்டர் குமார் தம்பதியினர்
புதிய நூலான "தொடங்கு, தொடர்..' முதல் பிரதியை டாக்டர் ரவி வாங்கிக் கொண்டார். விபிசி சுந்தரராஜன் முதலானோர் அடுத்தடுத்த பிரதியை.
தொடர்ந்து செய்வதே நம்மை வளர்க்கும், அப்படி தொடர்ந்து செய்யும் போது நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துப் போக, அதற்கான ஆட்கள் அனுப்பி வைக்கப் படுவார்கள் என்பது உண்மை உதாரணங்களோடு விளக்கப்பட்டது.
'பாரம்பரிய பழைய சோறிலேருந்து, குடல் பிரச்சினை, பாண்ட்ஸ் டால்கம் பவுடர், ஸ்பிரிச்சுவாலிட்டி எனர்ஜி, மாடர்ன் சம்மர் ஸ்கின் இஷ்யூ தீர்வு வரை எல்லாத்துக்கும் தீர்வு கெடைக்கற ஒரு இடம் மலர்ச்சி!' என்று வியப்புடன் குரல் பதிவு அனுப்பியிருக்கிறார் மலரவர் ஒருவர். மலர்ச்சி ஒரு பெரிய வரம்தானே! இணைப்பில் இருக்க வேண்டும் என்பதே மந்திர விதி.
வளர்ச்சிப்பாதை தொடர்ந்து வருவதும், மலர்ச்சியோடு இணைப்பிலிருப்பதும் எவ்வளவு நல்லதை செய்யும் என்பதை பல நாட்களாக வருகிறவர்களை பார்க்கையில் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான், 'கடுமையான சவால்களை எளிதாக கடக்க முடிகிறது பரமன்! நன்றி பரமன்!' என்றார் அந்த மலரவர்.
வளர்ச்சிப் பாதை முடித்து நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்து விட்டோம். இறைவன் துணை!
கற்றல் வளர்க்கிறது,
தொடர் கற்றல் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கிறது! அடுத்த வளர்ச்சிப் பாதையில் சந்திப்போம்.
வாழ்க! வளர்க!
- பரமன் பச்சைமுத்து
சென்னை
09.02.2024
#ParamanLifeCoach #Paraman #ParamanTouring #ParamanPachaimuthu #LifeCoach #Malarchi #MalarchiFollowup #ValarchipPaathai #MalarchiThiruvannamalai #Thiruvannamalai #Growth #Success #ParamanCoaching #inspirational
Comments
A
ARUNACHALAM P
Vanakkam paraman நேற்றைய வகுப்பு மறக்க முடியாத அனுபவம் இரண்டு மணி நேரம் வகுப்பு ஒரு நிமிடத்தில் முடிந்த மாதிரி இருந்தது பரமனுக்கு (சிவன்) நன்றி!
G
G.karthikeyan
கடந்த ஒரு வாரமாக மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தேன் . இந்த வளர்ச்சிப்பாதை வகுப்பில் கூறிய அனைத்தும் எனக்கு உபயோகமாக இருந்தது கணவன் மனைவி உறவு, மற்றவர்கள் கூறும் நல்ல அறிவுரைகளை உள் வாங்குதல், உடல் ஆரோக்கியம், உடல் உஷ்ணத்தை தணிக்கும் சில டிப்ஸ் ஆகியவை மிக மிக பயனுள்ளதாக இருந்தது நன்றி பரமன் ❤️