Loading

Blogவெளியூர்ப் பயண நேரங்களில் நிறைய கனவுகள்

வெளியூர்ப் பயண நேரங்களில் நிறைய கனவுகள்

31-01-2024 2 Comments

கேள்வி: வெளியூர்ப் பயண நேரங்களில் நிறைய கனவுகள் வந்து தொந்தரவு செய்கின்றன.

பரமன்: பயம், ஆசை, வெறுப்பு, எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் உருவாகி அவை முழுமையடையாமல் உள்ளேயே இருக்கும் போது, அவற்றை கனவுகளின் வழியே தீர்த்து வைத்து மனதை இலகுவாக்குவது இயற்கையின் பெரும் கொடை. 

பழகப்படாத புதிய இடத்தில் தூங்கும் போது ஆழ் உறக்கம் வராமல் கனவுகள் வருவதும் சாத்தியம்.

வெளியூர்ப் பயணங்களில் எல்லா வேளைகளும் வெளி உணவு உண்பதால் சீரண மண்டலம் சீர் கேடு அடையலாம். வயிறு கெடும் போது கனவுகள் அதிகம் வரும் என்கிறது ஒரு மருத்துவ அறிக்கை.

மேற்கண்டவற்றில் ஒன்றோ, அனைத்துமோ காரணமாக இருக்கலாம். ஆய்வு செய்யுங்கள்.

வாழ்க! வளர்க!

Comments

  • R

    Ramaniponnambalam

    Yes can realise the difference between normal days and travelling time. The body gets totally changed due to many changes ,timings as well as food but didn't connect with dreams.Will check.

  • J

    Jahir Andaman

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா

Leave a Reply