Loading

Blog'BUSINESS MANDHIRANGAL'

'BUSINESS MANDHIRANGAL'

20-02-2024 0 Comments

தொழில் முனைவோராய் இருப்பதற்கும், தொழில் முனைவோராய் வளர்ந்து உயர்ந்து மிளிர்வதற்கும் நிலை வேறுபாடுகள் உண்டு. வெறும் இருக்கையில் அமரும் சங்கதியல்ல அது. 

சந்தை, பார்வை, மனப்பாங்கு, திறன் என பல்வேறு சங்கதிகளை கற்று மேம்படுத்தி் வளர வேண்டிய இருக்கை அது. 

சிதம்பரம், சேத்தியாதோப்பு, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து வந்திருந்த 80 தொழில்முனைவோர்களுக்கு, அடுத்த நிலை உயர்வதற்கான ஊட்டத்தையும் உரத்தையும் ஊட்டும் விதமான மலர்ச்சி பயிலரங்கு ஒன்றை செய்தோம்.

புதுச்சேரி, 'ஹோட்டல் அதிதி'யில், 18.02.2024 ஞாயிறன்று மாலை 6 மணியிலிருந்து இரவு 08.15 வரை சிறப்பாக நிகழ்பெற்றது -  'பிசினஸ் மந்திரங்கள்' - MALARCHI Workshop for Business Community.  

மென்பொருள் உற்பத்தி, நிதி மேலாண்மை ஆலோசம், பாத்திரக் கடை வணிகம், அணி வணிகம், உடல் நல ஆலோசனை, உயர்தர விடுதி, அழகுநிலையம், கம்ப்யூட்டர் உதிரி பொருள்கள் விற்பனை, கம்ப்யூட்டர் டேட்டா ரெக்கவரி, ஆப்பிள் கம்ப்யூட்டர் மொபைல் விற்பனை, லேப்டாப் சிஸ்டம்ஸ் விற்பனை, மின்சாதன பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலை, அடுமனை, டிஜிட்டல் பிரிண்ட்டிங், டிஜிட்டல் பிரிண்ட்டிங் மெஷின்ஸ் விற்பனை, நாட்டு மருந்து விற்பனை, ஃபார்மா இண்டஸ்ட்ரி, துணி வணிகம், ஆயத்த ஆடைகள் வணிகம், பயண ஏற்பாட்டாளர், ஈவண்ட் மேனேஜ்மெண்ட், மெல்லிசை பாடகர் ஏற்பாட்டாளர் என பல துறைகளிலிருந்தும் தொழில் முனைவோர்கள் வந்திருந்து கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

'இந்த ஒரு விஷயம் புரியாம இத்தனை நாளா போராடியிருக்கேன். நன்றி பரமன்!' 

'இந்த அடிப்படைகள் என்னை நிமிர்ந்து நிற்க வைக்கும்' 

'நெறைய நெறைய இன்புட்ஸ் கெடைச்சிருக்கு. பயங்கர ஹாப்பீ! உங்க ஃபுல் கோர்ஸ் எப்போ?' 

'பரமன், முழுசா உங்களையும் நீங்க சொல்றதையும் உள் வாங்குனேன். வேற எதுவும் பேசக் கூடத் தோணல!' 

'இத்தனை வருஷம் பிசினஸ்ல இருக்கேன். எப்படி இத்தனை நாளா இதையெல்லாம் விட்டேன், மலர்ச்சியெ எப்படி வுட்மேன் தெரியலை. அருமை பரமன்!' 

'பரமன், போன மீட்டிங்கிலேருந்தே நிறைய சேஞ்ச். இப்ப இதுல நெறைய இன்புட்ஸ். செயல் படுத்திட்டு வெற்றியோடு வர்றேன் பரமன்!' 

'நல்ல வேளை இதில கலந்துகிட்டேன். தேங்க் காட்!'

'சிதம்பரத்திலேருந்து நாங்க அஞ்சு பேரு வந்தோம். பிரமாதம் சார். எங்க பிசினஸ்ல நடக்கற சிலதை அப்படியே சொல்றீங்க சொல்யூஷ்ஷனோட!' 

இவை 'பிசினஸ் மந்திரங்கள்' பயிலரங்கிற்கு வந்திருந்த தொழில் முனைவோர்களின் பகிர்வுகள்.

சிறு குறு தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டல் ஊக்கம் தரும் பயிலரங்கு ஒன்றை மலர்ச்சியிலிருந்து இலவச பங்களிப்பாக தர இருக்கிறேன் என்று ஒரு காஃபி குடிக்கையில்  நாம் பகிர்ந்ததை உள் வாங்கி, மலரவர்கள் சபரிநாதன் (வி வி கம்ப்யூட்டர்ஸ்), மகேஷ் சோனி (ஆரோ எண்டர்ப்ரைஸஸ்), ஹரிஹரன் (எஸ்எல்என் இன்ஷ்யூரன்ஸ் கார்னர்) , பாலகிருஷ்ணன் (ரேணுகா டிசைன்ஸ்), கோபிநாத் (மாயா ஸ்டுடியோ), முத்துக்குமரன் (ஷிவா பிரிண்ட்ஸ்) ஆகியோர் முன்னெடுக்க, மலரவர்கள் கோவிந்தராஜுலு (அம்சம் டிராவல்ஸ்), முகேஷ் (கந்தவிலாஸ் நாட்டு மருந்து கடை ), தேவநாதன் (தேவா கோல்டு ஹவுஸ்), மகேந்திரன் (வெற்றிவேலா கம்ப்யூட்டர்ஸ்), சீனிவாசன் (சூர்யா ஹோம் ப்ராடக்ட்ஸ்) போன்றோர் சிறப்பாக முயன்று பிறரிடம் கொண்டு சென்று அவர்களுக்கு உதவினார்கள். 

உழவும் தொழிலும் பெருகட்டும் என்றே எப்போதும் கூறும் நமக்கு, தொழில்முனைவோர்களின் உள்ளே மலர்ச்சியின் சக்தியை பாய்ச்சினோம் என்பதில் பெரும் மகிழ்ச்சி.  பெரிதாக வளரட்டும் தொழில் முனைவோர்கள். சிறப்பாக செழிக்கட்டும் அவர்களது தொழில்கள்! 

கருவாக்கி உருவாக்கி எனையாண்டு 
காத்தருளும் இறைவா நன்றி!

வாழ்க! வளர்க!


பரமன் பச்சைமுத்து
சென்னை
20.02.2024

 ......

80 Entrepreneurs and Business Leaders  from 
Puducherry - Cuddalore - Chidambaram - Sethiyathopu - Sirkali 

Business, Leadership, Perception, Transforming, Triggering....

'BUSINESS MANDHIRANGAL'
- MALARCHI Workshop for Business Community by PARAMAN PACHAIMUTHU 

@Athithi Hotel, 
Puduchery 

18.02.2024


#BusinessMandhirangal #BusinessLeaders
#businesscoaching #Entrepreneurs #MalarchiBusinessCoaching #Puducherry
#Business #BusinessLeaders #BusinessLeadership #Entrepreneurs  #Success #Leaders #Leadership #Malarchi 
#ParamanLifeCoach #Paraman #ParamanPachaimuthu #LifeCoach
#ParamanCoaching #TamilMotivational #ParamanPachaimuthu #LifeCoach  #ParamanTouring #MalarchiPuducherry

Comments

Leave a Reply