Loading

Valarchi Vidhaigal

By:

“யூ லேர்ன்‌ செல்லிங்‌ பெஸ்ட்‌ ஃப்ரம்‌ த ஃபீல்டு!”

ஒரு பயிற்சி வகுப்பின்‌ இறுதியில்‌ நான்‌ கேட்க நேரிட்ட, என்னுள்‌
இறங்கி பொதிந்து போன. அடுத்த சில ஆண்டுகளுக்கு என்னை
இயக்கி விற்பனைத்‌ துறையில்‌ என்னை வெற்றியாளனாக மிளிரச்‌ செய்த வாக்கியம்‌.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விற்பதைப்‌ பற்றிச்‌ சொல்லித்‌ தந்த இந்த வாக்கியம்‌ சில ஆண்டுகள்‌ கழித்து வேறு மாதிரி புரிந்தது. விற்பனை வித்தைகள்‌ மட்டுமல்ல வேண்டிய யாவும்‌ கற்றுக்‌ கொடுக்கும்‌ ஒரு பெரிய ஆசான்‌ வாழ்க்கை என்று புரிந்தது.